2020 நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்- பொதுஜன முன்னணி 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி

2020 நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்- பொதுஜன முன்னணி 145 ஆசனங்கள் பெற்று அமோக வெற்றி

2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6853693 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 128 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி  2771984 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 47 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 445958 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 2 ஆசனங்களையும் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி 327168 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 9 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியினருக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியானது 249435 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு எந்தவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஒரு தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 67766 வாக்குகளை பெற்றுள்ளதோடு ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் அபே ஜனபல கட்சி 67758 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதொடு ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.