ஸ்ரீலங்கா வரலாற்றில் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமையும் வலுவான ஆட்சி! உற்சாகத்தில் மகிந்த தரப்பு

ஸ்ரீலங்கா வரலாற்றில் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமையும் வலுவான ஆட்சி! உற்சாகத்தில் மகிந்த தரப்பு

கடந்த 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன அமைத்த அரசாங்கத்தின் பின்னர் மிகவும் வலுவான அரசாங்கத்தை இம்முறை தமது கட்சி அமைக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனிக் கட்சியாக அதிகமான ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றும் எனவும் அந்த கட்சி கூறியுள்ளது.

இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏனைய கட்சிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் பெரும் உற்சாகத்தில் இருப்பதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.