நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருகிறது.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Dengue Chikungunya Spreading Rapidly

இதற்கிடையில், நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறை குறித்து பிரதியமைச்சர் அமைச்சர் கூறுகையில், 180 வகையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் வைத்தியசாலைகளில் 45 வகையான மருந்துகள் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.