உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக உயர்வு

உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சமாக அதிகரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் ஒரு கோடியே 89 இலட்சத்து 75 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்த வைரஸ் காரணமாக இதுவரையில் 7 இலட்சத்து 11 ஆயிரத்து 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கமைய, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 21 இலட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு, இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 61 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில்  65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.