யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத செயலால் துயரத்தில் குடும்பம்

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத செயலால் துயரத்தில் குடும்பம்

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய  ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத செயலால் துயரத்தில் குடும்பம் | Young Family Man S Actbring Stragedy In Jaffnaஇது குறித்து மேலும் தெரியவருகையில், இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணாது உறவினர்கள் தேடியுள்ளதுடன், பின்னர் தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணை, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.