குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை!

குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை!

குருநாகலையில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில்

குருநாகல் நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர்களைக் கைது செய்யுமாறு, சட்டமா அதிபரினால் பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன மேற்படி தகவலை வழங்கியுள்ளார்.