லெபனான் வெடிப்புச் சம்பவம்: காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு

லெபனான் வெடிப்புச் சம்பவம்: காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

குறித்த எட்டு பேரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத் தொழிற்சாலையொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நேரப்படி இரவு 08.30 மணியளவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.

இதில் குறைந்தது 135 பேர் உயிரிழந்ததுடன் ஐயாயிரம் பேர்வரை காயமடைந்துள்ளனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் லெபனானில் வசிக்கும் இலங்கையரின் வீடுகளும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பெய்ரூட்டிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிது சேதம் ஏற்பட்டிருந்தப்போதும் தூதரக அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லெபனானில் சுமார் 25,000க்கு மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.