
இறைச்சி விற்பனை இரு நாட்களுக்கு ரத்து: விடுக்கப்பட்ட உத்தரவு
இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெசாக் பண்டிகையை முன்னிட்டு, மே 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் இந்த உத்தரவுக்கு இணங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மே 11 ஆம் திகதி இரவு முதல் 14 ஆம் திகதி வரை அனைத்து மனபானசாலைகளையும் மூடுமாறு மது வரி திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.