இராணுத்திடம் வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு

இராணுத்திடம் வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு

ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான கடமையில் ஈடுபட்டுள்ள பிரமுகர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பை இராணுத்திடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதுகாப்பு தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பல அழுத்தங்களுக்கு மத்தியில் படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதால் படையினர் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பினை வழங்குகின்றனர்.

இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படையினரை பொலிஸாருக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.