
வாகன பேரணியை ஏற்பாடு செய்து அடாவடியில் ஈடுபட்ட பாலித!
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித தெவரப்பெரும நேற்று அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தேர்தல் சட்டங்களை மீறி போக்குவரத்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாகவும், முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி அவரது விருப்ப எண்ணைக் காண்பித்து பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தார்,
எனினும் பொலிஸார் இதை தடுத்தனர்.
இதைத் தடுக்குமாறு தெரிவித்த காவல்துறை அதிகாரிகளை அவர் அச்சுறுத்தினார், தடுத்தார், ஆனால் அவரைக் கைது செய்யவோ கட்டுப்படுத்தவோ காவல்துறை தவறிவிட்டது. என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.