வெசாக் தன்சல் தொடர்பில் வெளியான விசேட அறிவுறுத்தல்

வெசாக் தன்சல் தொடர்பில் வெளியான விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தன்சல்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

வெசாக் தன்சல் தொடர்பில் வெளியான விசேட அறிவுறுத்தல் | Special Instructions Regarding Vesak Dhansal

இதேவேளை, தன்சல் காலப்பகுதியில் தன்சல், உணவு விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இந்த நடவடிக்கையில், சுமார் மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.