
வீழ்ச்சியை பதிவு செய்யும் இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (24) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 304.16 ரூபாவாகவும், கொள்முதல் விலை 295.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.90 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 333.53 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 405.41 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 390.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 195.71 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 185.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 220.60 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 211.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.