தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (24) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,008,014 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,560 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 284,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price In Srilanka Gold Market

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,120 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 267,000 ஒன்று ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price In Srilanka Gold Market

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.