விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் எலிக்காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமென சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இதற்கான மருந்துகளை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை | Health Ministry Issues Warning To Farmers

சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் இன்பாஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.