இந்தியாவிலிருந்து மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு இறக்குமதி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு மனித நுகர்வுக்கு தகுதியற்றது என பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கருவாடு உலர்த்துவதற்காக இவ்வாறு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் அளவு சுமார் 280 மெட்ரிக் தொன் எனவும், அவற்றுக்கு தற்போது துறைமுகத்தில் முத்திரை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு இறக்குமதி | Import Salt Unfit For Human Consumption From India

சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம், உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதானக , மனித நுகர்வுக்கு தகுதியற்ற உப்பு சந்தைக்கு வர ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறாகுமதி செய்யப்பட்ட இந்திய உப்பை தென்னை தொழிலுக்கு வழங்கவும், உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கும் அறிவித்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் சாந்தனி விதானக தெரிவித்தார்.