நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு

நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு

நாட்டில் இரண்டு பகுதிகளில் அடையாளம் காணப்படாத இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மற்றும் குருநாகல் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு | The Constant Recovery Of Bodies In The Country

அதன்படி, களுத்துறையில் உள்ள  கெலிடோ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து சடலமொன்று நேற்று (12) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாகவும், இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் எனவும் 5 அடி 6 அங்குல உயரமுடையவரும் நீல நிற முழுக்கை சேட் மற்றும் காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.