கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் கொலை ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் கொலை ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகேபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று  (14) மாலை இடம்பெற்றுள்ளது.

கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் கொலை ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் | Young Man Murdered By Being Attacked With Aweapon

நவனெலிய, கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.