கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் இருவர் பலி

கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் இருவர் பலி

  மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், கெப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் இருவர் பலி | Two Killed In Out Of Control Vehicle Accident

விபத்தில் சாரதியும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.