நீராட சென்ற இளம் பொலிஸ் அதிகாரி ; இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம்

நீராட சென்ற இளம் பொலிஸ் அதிகாரி ; இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 29 வயதுடைய கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

நீராட சென்ற இளம் பொலிஸ் அதிகாரி ; இறுதியில் நேர்ந்த அசம்பாவிதம் | Young Police Officer Death Who Went Swimming

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த வேளையில் இவ்வாறு நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.