விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு

டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். ஏர் இந்தியா இதுகுறித்து புகாரளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு | Passenger Urinating On Fellow Passenger On Flight

இந்த சம்பவம் குறித்து உடனே விமான பணிப்பெண்ணிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விமான பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு  மாற்று துணிகள் வழங்கியுள்ளதுடன் , பாதிக்கப்பட்ட நபரை வேறு ஒரு இருக்கையில் அமருமாறு கூறிய விமான பணியாளர்கள் விமான கேப்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

தன் தவறுக்காக சிறுநீர் கழித்த நபர் அந்த பயணியிடம் மன்னிப்புக் கேட்டதாகவும், அந்த மன்னிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் விமானம் தரையிறங்கிய பிறகு அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை.

புகார் இல்லாமலேயே,  சிறுநீர் கழித்த நபருக்கு வாய்மொழி எச்சரிக்கையை விமான நிறுவன அதிகாரிகள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.