உங்களுடைய அன்ரோய் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டதை காண்பிக்கும் சில அறிகுறிகள்

உங்களுடைய அன்ரோய் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டதை காண்பிக்கும் சில அறிகுறிகள்

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மறுபக்கம் அவற்றினால் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

குறிப்பாக இணைய இணைப்பிலுள்ள மொபைல் சாதனங்கள் மற்றும் கணினிகள் ஹேக் செய்யப்பட்டு பயனர் தரவுகள் திருடப்படுதல் மிகப்பெரிய ஆபத்தாக காணப்படுகின்றது.

இதனை இலகுவாக கண்டறிது கடினமாகும்.

எனினும் சில அறிகுறிகளை வைத்து மொபைல் சாதனமோ அல்லது கணினியோ ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தீர்மானத்திற்கு வரமுடியும்.

அவ்வாறே அன்ரோயிட் சாதனங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்பதை பின்வரும் அறிகுறிகளை வைத்து அறிந்துகொள்ள முடியும்.

திடீரென Pop-Up விளம்பரங்கள் கைப்பேசியின் திரையில் தோன்றுதல்

பயனரின் அனுமதியின்றி அறியப்படாத அப்பிளிக்கேஷன்கள் நிறுவப்பட்டிருத்தல்

ஏற்கணவே நிறுவப்பட்டிருக்கும் அப்பிளிக்கேஷன் சிலவற்றின் ஐகான்கள் மறைக்கப்பட்டிருத்தல்

தீடிரென மின்கலத்திலுள்ள சார்ஜ் குறைவடைதல்

எழுமாறான அழைப்புக்கள் அல்லது தவறிய அழைப்புக்கள் என்பன வெளிநாட்டு இலக்கங்களிலிருந்து கிடைக்கப்பெற்றிருத்தல்

திடீரென அதிகமான மொபைல் டேட்டா பயன்படுத்தப்பட்டிருத்தல்

அப்பிளிக்கேஷன்களை அப்டேட் செய்ய முடியாத அளவிற்கு கிராக் ஆகியிருத்தல்

அப்பிளிக்கேஷன்கள் செயற்படுவதற்கு நீண்ட நேரம் எடுத்தல்