யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம்

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.

திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், 27ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி 28ஆம் திகதி இரவு உயிரிழந்தது.

யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு மரணம் | A Vaccinated Baby In Jaffna Dies Of Fever

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.