தேனீர் - கோப்பி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேனீர் - கோப்பி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி(Coffee) குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில்(India) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஒப் பண்டமென்டல் ரிசர்ச்(TIFR) நிலைய ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் நீரிழிவு நோய் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இதன்போது சில எலிகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லீட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான தேனீர், கோப்பி மற்றும் குளிர்பானங்களை கொடுத்துள்ளனர்.

அவ்வாறு, 2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.

தேனீர் - கோப்பி குடிப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Researchers Warn Tea And Coffee Drinkers

அத்துடன் தேனீர் மற்றும் கோப்பியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்க்கரை இல்லாத தேனீர் மற்றும் கோப்பி குடிக்க முயற்சி செய்யுமாறும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது எனவும் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.