நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை அங்கீகரிப்பதாக AI தொழில்நுட்பத்தின் மூலம் தவறாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளி குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

சட்டத்தால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை மத்திய வங்கி ஆளுநர் அங்கீகரிப்பதாக தவறாக சித்திரிக்கும் இந்த காணொளிகளின் நோக்கம், மக்களை முதலீடு செய்ய வழிநடத்துவதாகும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அவசர எச்சரிக்கை | Central Bank Of Sri Lanka Today Announcement

எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாகாமல், தகவலின் துல்லியத்தை சரிபார்க்க மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.cbsl.gov.lk மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பார்க்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான தகவல்களை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி அறிவுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.