பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரொனா...ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரொனா...ரசிகர்கள் அதிர்ச்சி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன் குடும்பத்தினர், இயக்குனர் ராஜமவுலி, நடிகர் விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா என பலர் பாதிக்கப்பட்டனர். அந்தவகையில் பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கடந்த சில நாட்களாக லேசான காய்ச்சல் விட்டு விட்டு வந்தது, அதேபோல் சளியும் இருந்ததால், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என வந்தது. இருப்பினும் அது பயப்படும் படியாக இல்லை, டாக்டர்கள் என்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். 

ஆனால் நான் தான் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாக கூறி இங்கு வந்தேன். மருத்துவர்கள் என்னை நல்ல முறையில் கவனிக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன். எனக்கு யாரும் தொலைபேசியில் அழைக்க வேண்டாம். நான் ஓய்வில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பதில்லை. என கூறியுள்ளார்