
அஞ்சல் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் ஆரம்பம்
அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியவை வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை 48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
அஞ்சல் திணைக்களத்தில் சுமார் 7,500 ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், இதற்கு தீர்வு காணக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.