70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு 3,000 ரூபா உதவித்தொகை இம்மாதத்தில்

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு 3,000 ரூபா உதவித்தொகை இம்மாதத்தில்

70 வயதைக் கடந்த குறைந்த வருமானம் பெறும் முதியோரருக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவு, மார்ச் மாதத்தில், அஸ்வெசும குடும்பங்களில் உள்ள 70  வயதிற்கு அதிகமான முதியோர்களுக்காக 2024 ஆண்டின் நவம்பர் மாதத்தில் இருந்து நலன்புரி பயனாளிகள் சபையினால் நேரடியாக ஸ்லிப் முறை ஊடாக அஸ்வெசும கணக்குகளுக்கு சம்பந்தப்பட்ட  வைப்பிலிடப்பட்டதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு அறிவித்துள்ளது. 


அதன்படி அஸ்வெசும குடும்பங்களில் உள்ள முதியவர்கள் தவிர்ந்த இதுவரை கொடுப்பனவு பெற்று வரும் முதியவர்களுக்கு மாத்திரம் தபால்/ உபதபால் அலுவலகங்கள் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், 2025 மார்ச் மாத கொடுப்பனவு மற்றும் மீதி கொடுப்பனவு தபால்/ உபதபால் அலுவலகங்கள் ஊடாக மார்ச் 20ஆம் திகதியிலிருந்து செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

53a9115c a460 413b 9d24 645b8a3ba17e