இன்றைய ராசிபலன் - 07.03.2025

இன்றைய ராசிபலன் - 07.03.2025

மேஷம்: அசுவினி: செயல்களில் வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பரணி: குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும்.கார்த்திகை 1: புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நன்மையாகும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறையை பிறர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலைகள் எளிதாக நடந்தேறும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய வேலைகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மையாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும்.திருவாதிரை: மாலைவரை வேலைகளில் நிதானம் தேவை. அதன்பிறகு நினைப்பதை நிறைவேற்ற முடியும்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நட்புகளின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். பூசம்: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.

சிம்மம்: மகம்: லாபமான நாள். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரம்: வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர். செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: மனதில் தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று நிறைவேறும்.

கன்னி: உத்திரம் 2,3,4: பெரியோர் உதவியால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அஸ்தம்: நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: கடுமையாக முயற்சி செய்தும் நிறைவேறாமல் இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.

துலாம்: சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். வியாபாரத்தில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் விழிப்புடன் செயல்படுங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.

விருச்சிகம்: விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் விழிப்பு அவசியம்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாலைவரை இருக்கும் தெளிவு அதன்பிறகு மாறுபடும்.

தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியடையும்.பூராடம்: சிந்தித்து செயல்படுவீர்கள். நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைப்பட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். அவிட்டம் 1,2: வழிபாட்டில் பங்கேற்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விருப்பங்கள் பூர்த்தியாகும்.

கும்பம்: அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவுகள் உங்களுக்கு எதிராக மாறுவர். சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். விலகிச்சென்ற உறவினர்கள் வீடுதேடி வருவர்.ரேவதி: உங்கள் செல்வாக்கு உயரும். சகோதரர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலை முடியும்.