எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம் – பெப்ரல்

எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம் – பெப்ரல்

எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் வாக்களிக்குமாறும் விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுகேகொட பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாகவும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் வாக்களிக்குமாறும் விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.