நாட்டில் நிலுவையிலுள்ள பல இலட்சம் வழக்குகள் !

நாட்டில் நிலுவையிலுள்ள பல இலட்சம் வழக்குகள் !

நீதிமன்றக் கட்டமைப்பில் 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் ஏற்படும் காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்படும் மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும் காணப்படுகின்றன.

நாட்டில் நிலுவையிலுள்ள பல இலட்சம் வழக்குகள் ! | Regarding The Pending Cases In The Country

அத்துடன் வணிக மேல் நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும், மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 11,31,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழக்கு விசாரணைகளை நெறிப்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பில் நீதிபதிகளுக்கு பயிற்சியளிக்கும் செயற்றிட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை நீதிபதிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் இதன் போது தெரிவித்துள்ளனர்.