நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (01) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Climate Change Warning To The Public

வடமாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.