இறுதிச் சடங்கொன்றின் போது உயிரிழந்த இரு சகோதரர்கள்

இறுதிச் சடங்கொன்றின் போது உயிரிழந்த இரு சகோதரர்கள்

பத்தேகம பகுதியிலா் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பத்தேகம - மத்தேவில பகுதியில் இறுதிச்சடங்கொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதிச் சடங்கொன்றின் போது உயிரிழந்த இரு சகோதரர்கள் | Baddegama Attackஇதேவேளை, குறித்த மோதலின் போது மேலும் இருவர் படுகாயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவருகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.