மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து பலி

மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து பலி

யாழ்ப்பாணத்தில் மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த  42 வயதுடைய  இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பூநாரிமடம் பகுதியில் கட்டடிடம் ஒன்றில் முதலாவது மாடியில் குறித்த நபர் மின் கம்பியிணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறுதாலாக கீழே விழுந்துள்ளார்.

மின் கம்பியிணைப்பில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து பலி | Falls To Death While Installing Electrical Wiring

இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.