
சவுதியிலிருந்து வந்த விமானத்தில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைப் பெண்
சவுதி அரேபியாவின், ரியாத்தில் இருந்து இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இறந்தவர் 49 வயதான மாணிக் அப்புமிலகே மல்லிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிபெண்ணாக பணிபுரிந்து நாடு திரும்பியிருக்கலாம் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது