பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு! வெளியான தகவல்
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைத்தது போதுமானதல்ல என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த விடயத்தை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே ஜயவர்த்தன (N.K. Jayawardene) தெரிவித்துள்ளார்.
கோதுமை மா கிலோவொன்று சந்தைகளில் தற்போது 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நேற்று முதல் நடைமுறையாகும் வகையில் ப்ரீமா மற்றும் செரண்டிப் ஆகிய மா ஆலை நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளன.
இந்நிலையில், 10 ரூபா விலை குறைப்பு மூலம் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க வேண்டுமானால் கோதுமை மா கிலோவொன்றின் விலை 25 ரூபாவினால் குறைவடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.