![](https://yarlosai.com/storage/app/news/1bd8f229c4a7fc1cca7a14aa0e662f46.jpeg)
நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுக்கும் தங்கம் விலை!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் நகைப்பிரியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.1ஆம் திகதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது.
சென்னையில் நேற்று (பிப்.7) ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.7,930க்கும், ஒரு சவரன் ரூ.63,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (பிப்.8) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,945க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,480க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.