வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் கோர தாக்குதல்!

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் கோர தாக்குதல்!

வவுனியாவில் (Vavuniya) பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்றையதினம் (07.02.2025) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர்தர மாணவன் ஒருவருக்கும், கீழ் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் கோர தாக்குதல்! | Al Student Attacked In Vavuniya School

இதையடுத்து கடந்த இரு தினங்களாக குறித்த முரண்பாடு நீடித்து வந்த நிலையில், கீழ் வகுப்பு மாணவன் வெளி இளைஞர்களை அழைத்துச் சென்று உயர்தர மாணவன் மீது பாடசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் உயர்தர மாணவன் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளனர்.