லெபனான் தலைநகரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவம் (காணொளி)

லெபனான் தலைநகரில் சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர வெடிப்புச் சம்பவம் (காணொளி)

லெபனான் தலைநகரான பீருட்டில் பயங்கர வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இதுவரை வெளியான தகவல்களின் படி, 15 நிமிட இடைவெளியில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, ஒன்று துறைமுகத்திலும் மற்றொன்று நகரத்திலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.