இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 834 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் நாட்டில் இன்றைய தினம் இதுவரை எவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.