மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சம்பவம்

மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிப்பலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் - திருகோணமலை வீதியில் நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிதி்பலகையில் பயணம் செய்தவர் தவறிவிழுந்து உயிரிழப்பு; தமிழர் பகுதியில் சம்பவம் | Passenger On Bus Footboard Falls And Diesஉயிரிழந்தவர் அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதியும் நடத்துனரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.