ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின்(epf) கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, 0112 201 201 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துவதன்மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்வதன் ஊடாக, கடினமின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Announcement Regarding The Epf

இதேவேளை ரணில் அரசின் காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.