இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பம்
இலங்கையின் ஏற்றுமதி திறனை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதி கூட்டுத்தாபனம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை என்பன இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இலங்கை ஏற்றுமதி சிறப்பு முயற்சி 2025 என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையின் பாரம்பரிய கலாச்சாரங்கள் மற்றும் உணவுகள் என்பன இந்த திட்டத்தினூடாக வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.