யாழ். மாவட்ட வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டி விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
நாட்டில் நாளைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வாக்கெண்ணும் மத்திய நிலையமான யாழ். மத்திய கல்லூரியில் இருந்து இன்று காலை 9 மணி முதல் யாழ். மாவட்டத்தில் உள்ள 526 வாக்குச்சாவடிகளிற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.
பொலிஸ் உத்தியோகத்தரின் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
நெடுந்தீவிற்கான வாக்குப்பெட்டிகள் உலகுவானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், யாழ். மத்திய கல்லூரி வளாகம் முழுவதும் விசேட அதிரடிப் படை மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இம்முறை தேர்தல் கடமையில் 7000 அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.