எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி அதன் விலைகளில் மாற்றம் ஏற்படுவதாகவும், அதனடிப்படையிலேயே மாதந்தோறும் விலைத்திருத்தம் செயல்படுத்தப்படுவதாகவும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புடன் சேர்ந்து எரிபொருள்  விலையும் உயர்வடைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, விலை சூத்திரத்தின் மாறுபடு காரணமாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அதனை செயல்படுத்தியாகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எரிபொருள் விலையினை திருத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் | Government Announcement On Fuel Price Change

இதனடிப்படையில் தொழிற்சாலைக்கான மின்சாரக் கட்டணத்தை 30 சதவிகிதம் குறைத்துள்ளோம்.

அதன் மூலம், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு அரசாங்கமாக, மக்களுக்கு நிவாரணம் வழங்க எரிபொருள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்’’ என்றார்.