தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் திகதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் திகதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் திகதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் ஜனவரி 29ம் திகதி அன்று காலை 09.21 மணிக்கு துவங்கி, ஜனவரி 30ம் திகதி காலை 08.59 வரை பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் உள்ளது.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram

முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதற்காக திதி கொடுக்க ஏற்ற இடங்களாக சொல்லப்படுவது காசியும், கயாவும் தான். காசியில் சிவ பெருமானை சாட்சியாக வைத்தும், கயாவில் பெருமாளை சாட்சியாக வைத்தும் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram

தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சூரிய பகவானை சாட்சியாக வைத்தே கொடுக்க வேண்டும். அதனால் சூரிய உதயத்திற்கு பிறகு புனித நீராடி விட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6 முதல் 07.20 வரை, காலை 9 முதல் 11.55 மணி வரை தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரங்களாகும். திருவோண நட்சத்திரத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறவர்கள் 09.21 முதல் 11.55 வரை தர்ப்பணம் கொடுக்கலாம்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram

புதன்கிழமை வேலை நாள் என்பதால் திருவோண நட்சத்திரத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாது என்பவர்கள் காலையில் சொல்லப்பட்ட நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்கள், காசி மற்றும் கயா தலங்கள் ஆகியவற்றை மனதில் நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து விட்டு, சூரிய பகவானை வழிபடலாம்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neramஅமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போடும் போது பூஜை அறையில் போடக் கூடாது. ஹாலில் முன்னோர்களின் படங்களை வைத்து, அதற்கு முன்பாக இலை போட்டு தான் படையல் போட வேண்டும்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram

அப்படி முன்னோர்களின் படம் இல்லை என்றால் யார் அமாவாசை விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்பாக இலை போட்டு, படைத்து, முன்னோர்களுக்கு அர்ப்பணித்து விட்டு, காகத்திற்கு சாதம் வைத்த பிறகு, அதே இலையில் அமர்ந்து சாப்பிட்டு, விரததத்தை நிறைவு செய்யலாம். பகல் 01.30 முதல் 2 வரையிலான நேரம் படையல் போட ஏற்ற நேரமாகும். தை அமாவாசை அன்று குறைந்த பட்சம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neramமுடிந்தவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களை நினைத்து நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, அவர்கள் மோட்ச கதியை அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு விளக்கேற்ற வேண்டும்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் சேர்த்தோ அல்லது முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாகவோ ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளான நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

தை அமாவாசையில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் | Thai Amavasai 2025 Tharpanam Seiya Ugantha Neram