நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்க புதிய திட்டம்

நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்க புதிய திட்டம்

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டம் வீதி விபத்துகளை குறைக்கும் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்க புதிய திட்டம் | New Plan To Reduce Road Accidents In The Country

புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த புதிய மென்பொருளின் மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் கொழும்பில் உள்ள பிரதான CCTV செயற்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

அதன் பின்னர், சாரதி வசிக்கும் பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸாரிடம் குற்றம் முறைப்பாடு அளிக்கப்பட்டு, அதற்கான அபராதம் சாரதிக்கு வழங்கப்படும்.