அவதானம்; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அவதானம்; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பனிமூட்டமான நிலை காணப்படுவதாகவும், எனவே சாரதிகளுக்கு எச்சரிக்கை செயல்படுமாரு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவதானம்; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Caution Warning Issued To Drivers

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.