மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

நாட்டில் 8.3 மில்லியன் லீட்டர் அளவில் மது அருந்துதல் குறைந்துள்ள போதும் அரச வருமானம் 11.6 பில்லியன் ரூபாய்கள் அதிகரித்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, மது மீதான கலால் வரி 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டமையை அடுத்தே இந்த பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

மது மற்றும் புகையிலை வரிகள் மீதான சமீபத்திய அதிகரிப்பை வரவேற்ற ADIC என்ற மது மற்றும் போதைப்பொருள் தகவல் மைய நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம், இந்த நடவடிக்கை பொது சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுபான நுகர்வில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் | Reduction Of In Alcohol Consumption

மேலும், அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுடன் இத்தகைய நடவடிக்கைகள் ஒத்துப்போகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஆண்டு சிகரெட் விற்பனையும் கணிசமான சரிவைக் கண்டுள்ளது, அதன் அளவு 521.5 மில்லியன் அலகுகளால் குறைந்துள்ளது. எனினும், சிகரெட்டுகளிலிருந்து வரி வருமானம் 7.7 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.

இது கலால் வரி அதிகரிப்பின் இரட்டை நன்மைகளைக் காட்டுகிறது என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மைய நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.