கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் நேற்று இரவு ஏற்பட்ட நிலையில், சிறுமி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த சிறுமி | Student Fallen From Borella Building And Dies

உயிரிழந்த சிறுமி மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறுமி அந்த மாடியில் உள்ள பெல்கனியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை கண்டறிய பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.