தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கல்கிஸ்ஸ (Mount Lavinia), பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை (07.01.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி | One Person Dies In Mount Lavinia Shooting

உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.